An Appeal to the Devotees
அன்பார்ந்த பக்தர்களுக்கு,
ஜனங்களுக்கு ப்ராயஸ்சித்தமாக அமைவதற்காகவே மஸ்கோகாவில் (Muskoka) 14 ஏக்கரில் இடம் வாங்கி அதில் கோவில் கட்டுவதற்காக பெர்மிட் (permit) எடுத்துக் கொண்டிருக்கிறோம். இந்தக் கோவிலானது ஜனங்களுக்காகவே பரிஹாரம் செய்வதற்கு அமைய வேண்டும். முக்கியமாக இராமேஸ்வரம், ப்ரயாகா, காசி, கயா மற்றும் பத்ரிநாத் என எல்லாவித க்ஷேத்ரங்களும் இருக்குமாறு அமைக்கப் போகிறோம். இந்த இடத்தில் திலஹோமம் நடைபெறவும், க்ஷேத்ர பிண்டமும் போடுவதற்கும் வசதி இருக்கும். இந்த இடத்தில், துர்மரணம் தூக்குமாட்டிக் கொள்வது, விஷம் அருந்தி மரணம் அடைவது, கர்மாவை செய்யாமல் பித்ரு தோஷங்கள், ஸ்திரி தோஷங்கள் என எல்லாவற்றையும் போக்குவதற்காகவே இந்தக் கோவில் அமைய உள்ளது.
அதனால் இந்தக் கோவிலைக் கட்டி முடிப்பதற்கு 6 மில்லியன் டாலர் தேவைப்படுகிறது. அதற்காக நாம் எல்லோரும் சேர்ந்து கட்டினால் தான் இக்காரியம் செய்ய இயலும். இம்மாதிரி நல்ல காரியத்தை செய்து முடிப்பதற்கு எல்லோருடைய பண உதவி மிகவும் தேவை. ஆதலால் பக்தர்கள் இந்த நற்காரியத்திற்காக brampton.veda@gmail.com மெயில் ஐடிக்கு உங்களது நற்கொடையை Interac மூலமாக அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.
மஹாவிஷ்ணு, காசி விஸ்வநாதர், கால பைரவர், நவக்ரஹங்கள், ஸப்தரிஷி பூஜை மற்றும் எல்லாவிதமான வைபவங்களும் நடைபெறும் இந்தக் கோவிலானது ஜனங்களுக்கு ப்ராயஸ்சித்தமாக அமையும்.
இப்படிக்கு,
P. பாலகிருஷ்ண சாஸ்திரிகள்